Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 20 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (20) தீர்ப்பை வழங்கியது.
இதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .