2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வடமராட்சியில் நீண்ட வரிசை

Freelancer   / 2022 ஜூன் 14 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன் 

யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி, கிராம கோடு ஆகிய  எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  பெற்றோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும்  மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரு நாட்களாக வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலையில், இன்றைய தினம் பெற்றோல் விநியோகம் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையிலேயே மக்களின் நீண்ட வரிசையை அவதானிக்க முடிந்ததுடன், நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலகம் ஊடாக பதிவு செய்யப்பட்ட   வாகனங்களுக்குரிய அட்டைக்கு  ரூபாய் 2500க்கு பெற்றோல் வழங்கப்பட்டது.

அத்துடன்  பிரதேசத்திற்கு வெளியே இருந்து செல்கின்ற அல்லது பிரதேச செயலகத்தில்  பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு ரூபாய் 500க்கு மட்டுமே பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது. 

இதேவேளை புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு  ரூபா 1500 க்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு  ரூபா ஆயிரத்துக்கு மட்டுமே பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .