Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 20 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
வடக்கில் இருந்து பனங்கள்ளு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய சூழ்நிலையில், வர்த்தகத்துறை அமைச்சானது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
“அதன் ஓர் அங்கமாக பனங்கள்ளு உற்பத்திக் கிராமம், பனங்கட்டி உற்பத்தி கிராமம், கடலட்டை உற்பத்தி கிராமம் போன்றவற்றை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் ஏதாவது எமது அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றால் நாங்கள் அதற்கு ஆதரவளிக்கத் தயார். தற்போது நமது நாட்டுக்கு ஏற்றுமதி கட்டாயம் தேவையானது.
“குறிப்பாக, நுவரெலியாவில் கோப்பி, தேயிலை போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது. எனவே, வடக்கில் இருந்து பனங்கள்ளைத் தயார் செய்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago