2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வடக்கிற்கு பூரண ஒத்துழைப்பு: நீதி அமைச்சர் உறுதி

Freelancer   / 2022 நவம்பர் 01 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று நேற்று (31) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், கடற்படையினர், சுகாதார கல்வித் துறை அதிகாரிகள், வைத்தியர்கள், துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ உத்தரவாதம் வழங்கியுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .