Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 08 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
வட மாகாணம் தழுவிய சுகாதார உத்தியோகத்தர்களின் தொழில் சங்க போராட்ட நடவடிக்கை, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன்பாக இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரிதியில் சுகாதாரத் துறையினர் பாரிய தொழில் சங்க நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்.
அந்த வகையிலேயே, வட மாகாண சுகாதார துறையை சார்ந்தவர்களும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன் சுகாதாரத் துறையினர் தொழில் சங்கம் சார்பான சுகயீன விடுமுறை போராட்டத்தையும் கவனயீர்ப்பு நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக திரண்ட உத்தியோகத்தர்கள், பதாதைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியும் வீதியில் பேரணியாக சென்று, கவனயீர்ப்பை வெளிப்படுத்தினர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago