2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வசந்தவுக்கு யாழில் கடும் எதிர்ப்பு

Editorial   / 2023 மார்ச் 26 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினர், யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் போராட்டம் வேண்டாம், யாழில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் என்று அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாதாரண மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்தி,யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியும் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் யாழ். ரிம்மர் மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேரணியாக வந்த சாதாரண பொதுமக்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கொழும்பில் இருந்து வந்திருப்பவர்கள், கலந்துரையாடலை உடனடியாக நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுமாறும் கோரிக்கை விடுத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .