2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்து பெண்களின் மோசமான செயல்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்-பொம்மைவெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (29) இரவு கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 2 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 28 மற்றும் 29 வயதுடையோர் எனவும் , அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .