2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழ்தேவியுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

Niroshini   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என். ராஜ்
 
அரியாலை - நாவலடி பகுதியில், இன்று (07) காலை 9 :55 மணியளவில், ஒருவர் ரயிலுடன் மோதுண்டு, உயிரிழந்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட யாழ்தேவி ரயிலுடன் மோதுண்டே, குறித்த நபர்  உயிரிழந்துள்ளார்.
 
ரயில் வருவதற்கான சமிஞ்கை ஒழிக்கப்படவிட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குறித்த நபர், அதனை பொருட்படுத்தாமல், ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
 
 இவ்வாறு உயிரிழந்தவர், அரியாலை - கனகரத்தினம் வீதி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதர் பாலரூபன் (வயது - 41)  என்பவராவார்.
 
உயிரிழந்தவரின் சடலம், நாவற்குழி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .