2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

யாழ். விபத்தில் பெண் துறவி பலி

Freelancer   / 2022 ஜூன் 05 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், மாநகர சபைக்கு அருகில் சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மண்டைதீவு 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஓங்கார ரூபி (வயது 70) எனும் பெண் துறவியே உயிரிழந்துள்ளார். 

பருத்தித்துறை வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பெண் துறவி, மாநகர சபைக்கு அருகில் உள்ள வீதிக்கு  சடுதியாக திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .