Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 04 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ். மாவட்டத்தில் உள்ள 78,442 சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் 5,000 ரூபாய் கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமுர்த்தி பயனாளிகளுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் அதே நேரம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 27, 978 பேருக்கு அரசாங்கத்தின் 5,000 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் 1-2 நபர்களை கொண்ட குடும்பத்திற்கு 5,000 ரூபாயும், 3 நபர்களை கொண்ட குடும்பத்துக்கு 6,400 ரூபாவும், நான்குக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குடும்பங்களுக்கு 7,500 ரூபாவாக சமூர்த்திக் கொடுப்பனவுடன் வழங்கப்படவுள்ளது.
அதேநேரம் யாழ். மாவட்டத்தில் சுமார் 6,000 வயது முதிர்ந்தவர்கள் பட்டியலில் காணப்படும் நிலையில் அவர்களுக்கும் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
யாழ்.மாவட்டத்தில் எரிவாயு விநியோகத்தை முறையாக மேற்கொள்வதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவிலே கிடைக்கப்பெறுகின்றது.
ஆகவே கிடைக்கப் பெறுகின்ற எரிவாயு சிலிண்டர்களை தேவையின் அடிப்படையில் பகிரந்தளிப்பதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
25 Apr 2025