2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிஸார் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என மாவட்ட செயலர் மகேசன், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேவிடம் கோரிக்கை விடுத்தார்.

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குமுறையில் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எரிபொருள் வரிசையில் இடம் பிடித்து வைத்தல், வரிசையில் மூன்று நாட்களுக்கு முன்னமே காத்திருந்து வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும். முதல் நாளே எரிபொருள் வரிசையில் நிற்பவர்களை அப்புறப்படுத்த பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

மேலும், ஆண்களுக்கு ஒரு வரிசை, பெண்களுக்கு ஒரு வரிசை, உத்தியோகத்தர்களுக்கு ஒரு வரிசை என்ற ஒழுங்கு முறையை ஏற்படுத்த வலியுறுத்தி இருக்கின்றோம். 

மாலை 5 மணிக்கு பின்னர் எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் அதனை மறுநாள் விநியோகிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதற்கான முடிவும் பிரதேச செயலக மட்டத்தில் சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
 
சட்டவிரோத செயல்களை தவிர்த்து அனைவருக்கும் எரிபொருள் கிடைக்க செயற்படவேண்டும். அதிகளவு மோட்டார் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உள்ளே இருப்பதால் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுகின்றது. அதனால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களின் மோட்டார் வண்டிகளைத் தவிர தரித்து நிற்கும் ஏனைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருக்கின்றோம் என்றார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .