2025 மார்ச் 31, திங்கட்கிழமை

யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம்

Editorial   / 2025 மார்ச் 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் தற்போது பேரணி  முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்த போதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறுக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என அறியப்படுகிறது.

நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X