2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்

Freelancer   / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள், இன்று செவ்வாய்க்கிழமை (21)  நடைபெற்றன. 

இறுதி கிரியைகள், கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 11 மணி வரையில் நடைபெற்றன. 

அதனை அடுத்து அவரது பூதவுடல், அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மதியம் 11.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, தகனக் கிரியைகளுக்காக இணுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் , கல்விசாரா உத்தியோகஸ்தர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .