2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

யாழ். சிறையில் 74 தமிழக கடற்தொழிலாளர்கள்

Mayu   / 2024 ஜூலை 28 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் , யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

பல்வேறு கால கட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் 64பேரின் வழக்குகள் செவ்வாய்க்கிழமை (30) திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது 

கடந்த ஜூலை 1ஆம் திகதி 25 கடற்தொழிலாளர்களும் ,  ஜூலை 16ஆம் திகதி 04 கடற்தொழிலாளர்களும் ,  ஜூலை 11ஆம் திகதி 13 கடற்தொழிலாளர்களும்,  ஜூலை 22ஆம் திகதி 22 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதாகியுள்ள 64 கடற்தொழிலாளர்களின் வழக்கு விசாரணைகளே செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X