Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 03 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
“வடக்கின் நுழைவாயில்...” சர்தேச வர்த்தக சந்தை 13ஆவது தடவையாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.
இக்கண்காட்சி, இன்று தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
கண்காட்சி கூடத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்துவைத்தார்.
கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் இந்தச் சந்தை நடைபெறுகிறது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில்நுட்பரீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் இக்கண்காட்சி உதவியாக இருக்கும்.
பல வருட காலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் கண்காட்சி மூலம் குறைக்கப்பட்டுள்ளது.
250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில், கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.
சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago