2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

யாழ்.குடா நாட்டில் விசேட சுற்றிவளைப்பு

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், நிதர்சன் வினோத்

யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் இன்றைய தினம் யாழ்.குடா நாட்டில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றல்  மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விற்பனை செய்யாது சேமித்து வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, யாழ் குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதோடு  எரிபொருள் விற்பனை  நிலையங்களின் எரிபொருள் கொள்கலன்களும் கண்காணிக்கப்பட்டன. (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .