2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழ். அத்தியடியில் பயங்கர சம்பவம்

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலாநிதி (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் கொலையானவரின் மகள் தெரிவிக்கையில்,

தமது வீட்டுக்கு , வீட்டு வேலைகளை செய்வதற்கும் , ஆடுகளுக்கு குழைகள் வெட்டவும் என ஒருவர் வருகின்றவர் எனவும் , அவர் நேற்றைய தினமும் வந்திருந்த போது , நான் வீட்டுக்குள் இருந்தேன். அம்மா தான் அவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார். 

பிறகு இருவரும் வாக்கு வாதப்படுவது கேட்டது, சிறிது நேரத்திற்குள் அம்மா பெரிய சத்தமாக கத்தினார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த போது , அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்தார். 

அந்நபரை அவ்விடத்தில் காணவில்லை என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது , கொலையானவரின் மகள் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாவும் , சந்தேகநபர் தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்று உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.   R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .