2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழில் ஹெரோயினுடன் யுவதி கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 08 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொக்குவிலில் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் கடந்த 3ஆம் திகதி ஒரு தொகை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கடந்த ஒரு வார காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் 6 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .