2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

யாழில் வைபவ வீட்டில் திருடன் கைவரிசை

Freelancer   / 2022 ஜூன் 03 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

இளவாலை - சிறுவிளான் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு 20 பவுன் நகை திருட்டுபோயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொண்டாட்டத்தில் அதிகளவான ஆண்கள் மது விருந்தில் ஈடுபட்ட பின்னர் தூங்கிவிட்டனர்.

இதை பயன்படுத்திய திருடன், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்றுள்ளான். காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. அத்துடன் நகை திருட்டு போன வீட்டில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் கைத்தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதுவரை சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .