Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 24 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல்களை புரிய முயற்சித்த 10 இளைஞர்களையும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் உத்தரவிட்டார்.
ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு கடந்த வியாழக்கிழமை மாலை சென்றுள்ளனர்.
அப்பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் குறித்த இருவரையும் தகாத வார்த்தையால் பேசியதுடன் குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை பொலிஸார் 10 இளைஞர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்களில் இருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்நிலையில் 10 இளைஞர்களையும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago