Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூலை 14 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
யாழில் முதன்முறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான "க்லோகல் 2023" கண்காட்சி நடைபெறவுள்ளது.
நாளை 15 மற்றும் நாளைமறுதினம் 16ஆம் திகதிகளில் க்லோகல் கண்காட்சி 2023 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கான விழிப்புணர்வு செயற்திட்டமும் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
க்ளோகல் 2023 எனும் தொனிப்பொருளில் இன்று முற்பகல் 9 மணிமுதல் முற்றவெளித் திடலில் (வீரசிங்கம் மண்டபம் முன்பாக) ஆரம்பமாகிறது. .
க்ளோகல் 2023 தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்போடு, சர்வதேச மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான செயற்திட்டம் இது.
வெளிநாட்டுத் தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் வேலைவாய்ப்பு, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் நுPகுஃநுவுகு மற்றும் தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகள், ஆலோசனைச் சேவைகள், பெற்றுக்கொண்ட திறன்களுக்கான அரசாங்கச் சான்றிதழ்கள், தொழிற்துறை பயிற்சிக்கான வாய்ப்புக்கள் மற்றும் வழிகாட்டுதல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக், தொழிலாளர்களுக்கான கல்வி வாய்ப்புகள், உற்பத்திதிறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் கண்காட்சியில் பகிரப்படவுள்ளதுடன், இளைஞர், யுவதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தொழிலாளர் திணைக்களம் உள்ளிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து துணை நிறுவனங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கி, ஊழியர் சேமலாப நிதியம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை (ஏவுயு) தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (Nயுஐவு) சமூக சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் அணுசரணை வழங்குகின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள அல்லது வடமாகாண இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் கற்கைள், தொழிற்பயிற்சிகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த க்ளோகல் வழிகாட்டி கண்காட்சியில் பங்குபற்றி தமது வேலைவாய்ப்பு தொடர்பான விளக்கங்களையும், வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்களது சந்தேகங்களையும், தேவைகளையும் பெற்றுக்கொள்ள றுறுறு.புடுழுஊயுடு.டுமு என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்வதுடன், உங்களது கேள்விகளுக்கான அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும்.
எந்தவொரு தயக்கமுமின்றி, அனைத்து விடயங்களிலும் தெளிவைப் பெற இளைஞர் யுவதிகள் இந்த க்ளோகல் கண்காட்சியை பார்வையிட்டு உங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும்,ஏனைய துறைசார்ந்த நிறுவனங்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
இதன்போது, இசை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago