2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

Freelancer   / 2022 மார்ச் 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில்  நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறையைச் சேர்ந்த சு.சுதர்சன் என்ற 29 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சீமெந்து கல் அரியும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சார வயரில் இருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கால், கல் அரியும் இயந்திரத்துக்கு மின் பாய்ந்துள்ளது என்றும், அதன்போது, இயந்திரத்தை இயக்கிய இளைஞர் மின் தாக்கத்துக்கு இலக்கானார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .