2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழில் போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது

Freelancer   / 2022 மார்ச் 10 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையை காண்பித்து திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளார்.

அவரது நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் கொண்டமையால் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இத்தகவலின் பிரகாரம் வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கியிருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதன்போது யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனையும் அது போலியான அடையாள அட்டை என்பதையும் கண்டறிந்துள்ளனர். 

இதனையடுத்து யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .