2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழில் போதைப்பொருள் ஊசிகளுடன் நால்வர் கைது

Editorial   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்,நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் கைது வேட்டையும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. ஹெரோய்ன் போதைப் பொருள் பாவணையாளர்கள் கைது செய்யப்படுவதுடன், விற்பனையாளர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

 யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருள் ஊசியை ஏற்றிய வண்ணம் இருந்த நான்குபேர் யாழ் மாவட்ட விசேட குற்றத் தடுப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொறுப்பதிகாரி உப- பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளார்.

அவர்களிடமிருந்து  இரண்டு கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் ஊசிகள் ஏழு, தேசிக்காய் என்பன கைப்பெற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 25 வயதானவர்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், மூன்று சந்தேக நபர்களுக்கு திறந்த பிடியாணை உள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .