2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழில் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இருவரின் வெறிச்செயல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நேற்று (27) அதிகாலை  வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர், வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு  சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்த போது , நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இரு குடும்பங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே பெண்ணின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .