Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 30 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோப்பாய் - யோகபுரம் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் யோகபுரம் பகுதிக்கு சென்றனர்.
அதன் போது அங்கிருந்த சிலர், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார் , இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
3 hours ago