2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யாழில் நீச்சல் தடாகத்தில் சடலம்

Freelancer   / 2022 ஏப்ரல் 02 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல  தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர்  தனியார் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1 மணியின்  பின்னர் நீச்சல் தடாகத்தில்  நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

இதையடுத்து, இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் குறித்த நபரை சடலமாக அவதானித்து யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

எனினும் உயிரிழந்தவருடன் மேலும் பலர் நீராடி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கை இறப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .