2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழில் தேங்கிய வெள்ள நீர்; சிரமத்தில் மாநகர ஊழியர்கள்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.மத்திய பஸ் நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் வெளியேற்றினர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (30) திடீரென கடும் மழை பொழிந்தது. அதனால் யாழ். மத்திய பஸ் நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றன.

அந்நிலையில், மாலைவேளை யாழ்.மாநகர சபை ஊழியர்கள் வெள்ளத்தை கடும் சிரமத்தின் மத்தியில் வெளியேற்றினர்.

வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால் பகுதிக்குள் பெருமளவான கழிவு பொருட்களை பொறுப்பற்ற தனமாக பலர் வீசிச் சென்றமையால் வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால் பகுதிகள் கழிவு பொருட்களால் நிரம்பி காணப்பட்டமையால், வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலைமை காணப்பட்டது.

கழிவுப் பொருட்களை மாநகர சபை ஊழியர்கள் அகற்றி வெள்ள வாய்க்காலை சிரமங்களுடன் துப்புரவு செய்தமையால் வெள்ளம் சில நிமிடங்களில் வழிந்தோடியுள்ளது .

குறித்த பணியில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனும் மாநகர ஊழியர்களுடன் இணைந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .