2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழில் ’’செங்குந்தா சதுக்கம்” திறந்து வைப்பு

Freelancer   / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ். மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதி இன்று(27) காலை ஒன்பது மணியளவில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சுகாதார குழுத்தலைவர் வ.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், கல்வியங்காடு வர்த்தக சங்கத்தினர், கல்வியங்காடு சந்தை வியாபாரிகள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .