2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழில் கொழும்பு வாசி உயிரிழப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கொழும்பை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பழனி கணேசதாசன் என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். 

கடந்த 7ஆம் திகதி தெல்லிப்பளை பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி ,  மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிறிதொரு நபருடன் சென்ற வேளை, மாவிட்டபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காயமடைந்தவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி கொழும்பு வாசி உயிரிழந்துள்ளார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .