2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழில் கத்திமுனையில் கொள்ளை

Freelancer   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - மானிப்பாய் வீதியில், ஆசிரியரை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி  நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 23, 25 மற்றும் 42 வயதுடைய ஊரெழு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய சந்தேகநபர்கள் மூவரும் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து நான்கரை பவுண் சங்கிலி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .