2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

யாழில் எலிக்காய்ச்சல்: ஒருவர் மரணம்

Editorial   / 2024 ஒக்டோபர் 25 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம் . றொசாந்த் 

 யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால்  வியாழக்கிழமை (24) ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சிவாஸ்கர் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். 

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 22ஆம் திகதி சங்கானை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கிருந்து யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழப்புக்கு எலி காய்ச்சலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.  யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (24) ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X