2025 மார்ச் 03, திங்கட்கிழமை

யாழில் 7 வயதான மகளை வன்புணர்ந்த தந்தை?

Freelancer   / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 01:15 - 0     - 140

எம்.றொசாந்த் 

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து , மது போதையில் மகளை வன்புணர்ந்தார் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .