2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

யாழில் 111 கைக்குண்டுகள் மீட்பு

Freelancer   / 2022 ஒக்டோபர் 14 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள காணியை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர்.

இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று  இன்றைய தினம்   காலை 6மணி முதல்  யாழ். மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால்  மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது   111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளனர்.  (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X