Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 மே 02 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில், யார்புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (02) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் பிரதமரை மாற்ற வேண்டும் என்று ஒரு குழுவினர் விடாப்பிடியாக நிற்கின்றார்கள். நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
“தற்போது பிரதமர் பதவி விலகினால், புதிய ஒருவர் பிரதமராக வருவார். அவருடன் ஒரு புதிய அமைச்சரவை உருவாகும். அந்த அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஐவர் கொண்ட குழுவை உருவாக்கி உள்ளார்கள்.
“அந்த ஐவர் கொண்ட குழுவில் உள்ளோர் எமக்கு திருப்தியில்லை. அவ்வாறான நிலையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
“பிரதமர் பதவி விலகினாலும் ஜனாதிபதி அவ்வாறே இருப்பார். அவருடன் இணைந்து உருவாகும் புதிய அமைச்சரவை தற்போதுள்ள அமைச்சரவையை விட மிகவும் கொடூரமான அமைச்சரவையாக இருக்கும்.
“எனவே, நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒரே நாளில் கொண்டு வந்து, நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் மூலமே நாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படும்.
“நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளோம். எனினும், அந்த விடயம் தொடர்பில் நாங்கள் அனைத்துக் கட்சிகளுடனும் ஆராய்ந்து முதல்கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago