2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழ். இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை

Janu   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில். இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட மாங்குளம் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் குழுவினர் கடந்த 22ஆம் திகதி யாழில். இருந்து வவுனியா நோக்கி காரில் பயணித்த போது, மாங்குளம் பொலிஸார், டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்ணில் பாய்ச்சி வழி மறித்துள்ளனர்.  

இந்நிலையில் இவ்வாறு வழி மறிப்பது தவறு என அந்த இளைஞர் குழு எடுத்து கூறிய போது அவர்களுடன் பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டு, அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன் தகட்டு இலக்கத்தையும் வழங்க மறுத்து, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அந்த இளைஞர் குழுவினர் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

பு.கஜிந்தன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .