2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

மூளாய் வைத்தியசாலையில் நகைகள் பணம் திருட்டு

Freelancer   / 2024 ஜூலை 20 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் - மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின், கடமை நேரத்தில் அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அறை ஒன்றினுள் 09 பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

வழமை போன்று நேற்றைய தினமும் பணியாளர்கள் தமது உடமைகளை பெட்டகத்தினுள் வைத்து பூட்டி விட்டு , தமது கடமைகளுக்கு சென்று இருந்தனர். 

கடமை முடிந்து வந்து பார்த்த வேளை பெட்டகங்கள் உடைக்கப்பட்டு , பணியாளர்களின் இரண்டே கால் பவுண் நகைகள் மற்றும் 55 ஆயிரத்து 500 ரூபாய் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .