2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முல்லைத்தீவில் வாகன பேரணி

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரிய "காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை" என்னும் நாடு தழுவிய வாகன வழி கையெழுத்துப் போராட்டம், முல்லைத்தீவை இன்று (15) வந்தடைந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து இக்கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

முல்லைத்தீவு - மல்லாவி, சிவன்கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டு, இந்தக் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமானது.

தொடர்ந்து மல்லாவி சிவன்கோவில், மல்லாவி நகர் உள்ளிட்ட இடங்களில் கையெழுத்து சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சந்திரலிங்கம் சுகிர்தன், மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் அமிர்தலிங்கம், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூக ஆர்வலர் தம்பையி யோகேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பெருந்திரளான மக்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .