Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 19 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - காரைநகர் , களபூமி பகுதியை சேர்ந்த வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விறகு பொறுக்குவதற்காக சென்ற போது, முட்கிளுவை மரத்தின் முள்ளு காலில் குத்தியுள்ளது.
அதனால் ஓரிரு நாட்களில் காலில் வலி ஏற்பட மூளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முள்ளு குத்திய காயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உட்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .