Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூலை 11 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காக்கைதீவு சந்தையில் பழுதடைந்த மீன் மற்றும் இறால்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சந்தைக்கு சென்ற அவர் திடீர் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்தார்.
அதன் போது , விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த, மீன்கள் மற்றும் இறால்கள் ஒரு தொகையை மீட்டிருந்தார்.
அவற்றை நீதிமன்றில் சான்று பொருட்களாக பரப்படுத்தி வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் , பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்களை அழிக்குமாறும் உத்தரவிட்ட மன்று , வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதியிட்டார்.
எம். றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .