2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மானிப்பாயில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.

இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .