Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைதீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணி ஆவணங்கள் நீண்ட காலமாக வழங்கப்படாத நிலையில் காணப்பட்டது.
தற்போது மீள்குடியேறிய மக்களுக்கான காணி ஆவணங்களை வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் ரீதியாக காணி நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு, காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையிலே, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட வன்னி விளாங்குளம் கிராம அலுவலர் பிரிவு மற்றும் அம்பாள்புரம் கிராம அலுவலர் பிரிவு ஆகியவற்றில் வசிக்கும் மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞசனா நவரட்ணம், பிரதேச செயலக காணி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொறுப்பான கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு, காணி ஆவணங்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Apr 2025