2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவனை தாக்கிய அதிபருக்கு ஏற்பட்ட நிலை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.

தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்த அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளது.

இதையடுத்து மிருகவதைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அதிபருக்கு பிணை வழங்க மறுத்த மன்று 14 நாள்களுக்கு  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. (R.)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .