Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 12 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த்
இறைச்சிக்காக பசு மாடுகளை திருட்டுத்தனமாக எடுத்துச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எல்.ஏ நயனஜித் தெரிவித்தார்.
வளலாய் விமான நிலைய வீதியில் நேற்று முன்தினம் (11) இரவு 07 மணியளவில் பலாலி பொலிஸார் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த போது மருதடி சந்தி பகுதியில் வைத்து வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.
இதன்போது, குறித்த சிறிய வாகனத்தில் 05 மாடுகளை மிகவும் சித்திரவதை செய்து, இறைச்சிக்காக திருட்டுத்தனமாக எடுத்து சென்றமை தெரியவந்தது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட மூவரில் இருவர் கொழும்பு - 14 ஐ சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் அச்சுவேலி, தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாடுகள் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டமையால் ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக வலிகாமம் பகுதிகளில் மாடுகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துச் செல்கின்றமையால், பலாலி பொலிஸார் இரவு நேர ரோந்து கடமையை அதிகரித்துள்ளனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago