2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மாகாண சபை முறைமை, தமிழ் மக்களுக்கு சிறந்த ஆரம்பம்

Princiya Dixci   / 2022 மார்ச் 30 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

 

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே என்ற தனது வழிமுறையை தமிழ்த் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை தாம் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவருத்தி உட்பட பல திட்டங்களுக்கான கோரிக்கைகளையும் இந்தியாவிடம் அவர் முன்வைத்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரை, திங்கட்கிழமை சந்தித்துப் பேசிய போதே மேற்கண்ட விடயங்களை, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பருத்தித்துறை மற்றும் பால்சேனை உட்பட வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கெனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

இச்நிலையில், இலங்கைக் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு இந்தியாவால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

மேலும், வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான சுமார் 23 திட்டங்களைகளை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் முன்வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .