2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. ஏ.ஆர்.வி, ஏ.ஆர்.எஸ் போன்ற மருந்துகளுக்கு மிகப் பெரும் தட்டுப்பாடு காணப்படுகின்றதென  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் சி.ஹரிகரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பல மைல் தூரத்தில் இருந்தும், வட மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிரமத்திற்கு மத்தியில் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றார்கள்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் மருந்து இல்லாத போது பல்வேறுபட்ட இடர்பாடுகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. இதற்கு அரசாங்கம் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பெரும்பாலான மருந்துகள் தீர்ந்துவிட்டன. நாய் கடித்தால் உயிருக்கு கூட ஆபத்து வரும் நிலைமை காணப்படுகின்றது என்றார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .