2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மருந்து தட்டுப்பாட்டால் யாழ். போதனாவில் கண் சத்திரசிகிச்சை இடைநிறுத்தம்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 21 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு. நந்தகுமார் தொிவித்துள்ளார்.

கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார். 

மேலும் நந்தகுமார் தெரிவிக்கையில், 

“கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் மருந்துகளுக்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அவை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .