2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மந்திரிமனைக்குள் நுழையத் தடை

Freelancer   / 2023 மார்ச் 06 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் ஒன்று அங்கு ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .