2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மதிய உணவுத் திட்டம் ஆரம்பிப்

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்
 
யாழ் செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை வடமகன ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக  திங்கட்கிழமை (12) ஆரம்பித்து வைத்தார்.
 
குளோபல் அசோசியேசன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கன நிதி அனுசரணையை வழங்கினார்கள்.
 
முதற்கட்டமாக பாடசாலையின் வங்கி கணக்கில் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியினை வட மாகாண ஆளுநரின் பெயரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
 
மேலும் குறித்த  திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்துவதற்காக புலம்பெயர் வாழும் குளோபல் அசோசியேசன் பங்குதாரர்களான தர்மலிங்கம், சண்முகதாஸ், சூரிய குமாரன் சதீஷ்குமார் ராஜலிங்கம் ராஜகுமாரன் ஆகியோரின் அனுசரணையுடன் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை பாடசாலை அதிபரிடம் ஆளுநரால் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .