2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மணல் கொள்ளையர்களின் அட்டகாசம்

Freelancer   / 2022 மார்ச் 11 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

கொடிகாமம் - பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தடுக்க சென்ற காணி உரிமையாளர் தாக்கப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

கொடிகாமம் பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மணல் கொள்ளையர்கள் , காணிக்குள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 

இதனை அறிந்த காணி உரிமையாளர் மணல் கொள்ளையை  தடுக்க சென்ற போது , கொள்ளையர்கள் காணி உரிமையாளரை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளையும் தீ மூட்டி எரித்து விட்டு சென்றுள்ளனர். 

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான காணி உரிமையாளர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .